Dream the way of life....(கனவு வாழ்க்கை)

தமிழின் சுவை அதன் அர்தத்தில் உள்ளது. அதன் உருவம் கவிதையில் உள்ளது.

Saturday, September 30, 2006

(*....O....E நிலா ஒரு திருடி!

வெள்ளை கம்பள வீதியிலே
உலா வரும் திருடி நீ!
இல்லை; என்றால் ஏன்?
இரவில் மட்டும் வருகிறாய்

தலைவன் சூரியன் வந்தால் -வாடுகிறாய்
தெரிந்தால் ஓடுகிறாய்
அதிலும் கொஞ்சம் கொஞ்சமாய்
பயத்தில் தேய்கிறாய்

பெண்ணென்றால்! என்னவாம்
இரண்டுங்கெட்டான் பொலப்புதானா?
தேய்கிறாய்... வளர்கிறாய்
காணாமலும் போகிறாய்!

பொடி பயலுகள் உன்னை
பார்த்து கண்சிமிட்ட வேண்டுமா?
பிறகு ஏன் நட்சத்திர உலா வேலையில்

தேரோட்டம் காட்டுகிறாய்?
cவெள்ளை அறிக்கை!

வெள்ளை அறிக்கை என்ற
ஒவ்வோர் தாளும்... ஓர்
இரத்தக் காட்டின் பரப்பளவு
அதன் ஒவ்வோர் சொல்லும்
ஓர் உயிரின் வாக்குமூலம்!
N மனித நேயம்
அன்று
கல்லை வெட்டியாவது
காவியம் படைத்தோம்
இன்று
வரப்போர புல்லை வெட்டினால்
தலையை வெட்டுகிறான் -
செத்துவிட்ட மனித நேயத்தால்
பங்காளியின் பரிசளிப்பு!


செத்தவன் காடு சேருமுன்
மத்தவன் மாமியார் வீடு போனான்!

எங்கே?
சிறை தான் அவனுக்கு நிறையாக!
யார் இவர்கள்?

என் இனிய பெற்றோரே!
நீங்களும் விரும்புகின்ற காதலர்கள்
நாங்கள் - அதிலும் உங்களுக்காகவே
காதலிக்கிறோம்!


நீங்களே மிதித்தாலும் உதைத்தாலும்
உங்களோடே வருகிறோம்
உங்களையும் காக்கிறோம்-ஆதலின்
நாங்கள் காதலிக்கிறோம்!

அளவிலும் வயதிலும்
இனையற்ற ஜோடி நாங்கள்


பாலினம் என்ன? என்று கேக்காதீர்!
வலம் இடமாய் வருகிறோம்..


பிறந்தாலும் இறந்தாலும் பிரியாத
எங்களை போல்... நீங்களும்
வாழ்க என வாழ்த்தும்...


வலது & இடது.. செருப்பு.
விளக்கணைக்காமல்....

என் கனவு தேவதை
இருட்டில் மட்டும் வருவதால்
விளக்கணைக்காமல்...
தலையணையை அணைத்து
படுத்திருந்தேன்....
வண்ணத்தில் ஓர் விளையாட்டு..

wதமிழக அரசியலும்...
வண்ணங்களின் விளையட்டுமாய்..
நண்பன் பிரபாகரனுக்காக..

wகறுப்புக்கு மறுப்பு கூறாமல்
அதையே பணமாக கொண்டவர்கள்

wசிவப்புக்கு சிங்காரித்து
மனிதர்களை சிதைத்து விட்டவர்கள்


wவெள்ளை ஏனோ பாவமென்று
துணைக்கு வைத்துக் கொண்டார்கள்

wபுதிதாய் மஞ்சள் அதுயாருக்கெல்லாம்
ஊஞ்சல் என்று விளையாடுகிறார்கள்

Pநீல்மாய் வந்தவர்கள் வாய்நீள
பேசிவிட்டு கம்பி நீட்டி விட்டார்கள்!

தனித் தனியாய் சொல்லிவிட்டால்
நானா அது? என்று மிரட்டுபவர்கள்!

Sஅவர்கள் ஆளுவதற்கென்று... நாம்,
அதைக் கண்டு அழுவதற்கென்று..!

இது அரசியல் விளையாட்டு...
ஆகவே இத்துடன் நிப்பாட்டு!i

Sunday, May 14, 2006

Saturday, May 13, 2006

தாய்

அறுத்தெறிந்த பின்னும்
அன்பாக சுமப்பவள்..
மழை '".'.".'''

மயில் தானே ஆடியது
மேகத்திற்கு ஏன்
வியர்வை!
மல்லிகை


பூத்த மலரென்னை
காதலாய் காமுகித்து
தேனதனை சுரண்டிச்சென்றான் ஒருவன்...


மற்றவன் கட்டியணைத்து கையோடு
எடுத்த போது இதழ் விரித்து சிரித்தேன்..

மூன்றாமவள்.. காசு கொடுத்து
நூலருத்தாள்- மற்றானிடமிருந்து
அந்தி மாலை வந்ததும் என்னை
விலக்கி விட்டாள்- அவள்.

ஏனோ எல்லோரும் என்னை
மணக்கும் மல்லிகை என்கிறார்கள்!

நானா? அந்த (அறுந்த)
ஒற்றைகால் வெள்ளை புடவை?
காலண்டர்..

உன்னுடன் பேசிய தினத்தை
நினைத்துக் கொண்டே இருந்தேன்
அடுத்த மாத வாடகைக்கு
வீட்டுக்காரன் வரும்வரை
ஏனெனில்- காலண்டர்
கிழிக்கபடாமல் இருந்தது.!
வரதட்சணை
(காதலிக்கும் மகளோ ஏழையின் பிள்ளை,
அதை ஆதரிக்கும் தகப்பனின் கதறல்.. வரிகள்
உங்கள் எண்ணம் நக்கலுடன் படிக்கட்டும்.)

அன்பு மகளே, காதலி!
மகிழ்வுடன் காதலி...

தனம் தந்து தாலி வாங்க
தாஜ்மஹால் சொந்தமில்லை- எனக்கு

தட்சணையின்றி தாரம் கேட்க
ராமனென்று எவனுமில்லை..
கடன் வாங்கி கரையேற்ற
கனரா பேங்கொன்றும் சொந்தமில்லையே!
உன் கைவளையும், மோதிரமும்
எண்ணிப்பார்க்கும் கணவன் உனக்குத்
தேவையுமில்லை!
பூவோடும் பொட்டோடும்
மகிழ்வுடன்- நீ வாழ
நான் தட்டேந்திக் குரல் கொடுக்கத்
தேவையுமில்லை!
ஆதலின் மகளே! காதலி!!
மகிழ்வுடன் காதலி...
Zரோஜா!!

அட பாவமே!

இரவு முழுதும்

முட்கள் குத்தியதால்

அழுதழுது சிவந்ததோ

உந்தன் கண்ணங்கள்...
தமிழ் அன்னை!!

அன்பே! சொல்லின் இனிமையே!
ஐநில மண்ணை ஆளும் உனை
பைந்தமிழில் சிலையென கொண்டேன்
ஏற்றுக்கொள் என் முத்தமிழே
!

கயல் கொண்ட கண்ணிலெ
புலி கொண்ட பார்வையாய்
இமை நாண் அம்புகளாய்
தமிழ் காக்கும் தாயே!

அகத்தியனின் ஞானத்தால்
காப்பியனின் இலக்கணமும்-சேரும்
கோவையின் கணி இதழே!
பொய்கையின் சாரலே
தஞ்சையின் வளம் போல்
வாழி நீ!


மல்லபுர சிற்பியின் உடலோடு
உயிர் தரும் அன்னவாசல் சித்திரமே
என் மொழியான பொய்கையின்
ஊற்றே- தமிழே வாழி நீ!! வாழி!